வீடியோ: ’நடிகையர் திலகம்’ படத்தின் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்!!

புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் தான் நடிகையர் திலகம். ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் கோலிவுட்டிலும், ‘மகாநதி’ என்ற பெயரில் டோலிவுட்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 

Updated: Dec 7, 2017, 12:43 PM IST
வீடியோ: ’நடிகையர் திலகம்’ படத்தின் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்!!
Courtesy: Youtube

புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் தான் நடிகையர் திலகம். ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் கோலிவுட்டிலும், ‘மகாநதி’ என்ற பெயரில் டோலிவுட்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 

நடிகை சாவித்திரி 60-ம் மற்றும் 70-ம் ஆண்டு காலகட்டங்களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். 

அந்த வகையில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை சினிமா படமாக எடுத்து வருகிறார் இயக்குனர் நாக் அஸ்வின். மேலும் ‘வைஜெயந்தி மூவீஸ் - ஸ்வப்ன சினிமா’ நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகிறது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா, நிருபர் வேடத்தில் நடித்துள்ளார். துல்கர்சல்மான் ஜெமினி கணேசனாக வேடத்தில் நடிக்கிறார். 

இந்நிலையில் நேற்று நடிகை சாவித்ரியின் பிறந்த நாள் என்பதால், நேற்று நடிகையர் திலகம் படத்தின்  ‘நடிகையர் திலகம்’ லோகோ வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.