சிம்ரனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் முதல் முறையாக ரஜினியுடன் இணைகிறார்

பிரமாண்ட இயக்குனர் சங்கரின் "2.O" படத்திற்கு பிறகு, தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 19, 2018, 03:50 PM IST
சிம்ரனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் முதல் முறையாக ரஜினியுடன் இணைகிறார் title=

அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் "2.O". இந்த படம் மிக அதிக பெருட்செலவில் பிரமாண்டமாக உருவாக்கபட்டு உள்ளது. தற்போது படத்தின் விபிஎக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் இயக்குனர் சங்கர் வரும் நவம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். 

சங்கரின் படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்களை பற்றி தொடர்ந்து அறிவிப்பு வெளிவந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே, படத்திற்கு இசை அமைப்பாளராக அனிருத், ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி என அறிவிக்கபட்டு இருந்தது. 

இந்நிலையில், நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ரஜினியின் அடுத்த படத்தில், நடிகை சிம்ரன், பாலிவுட் நடிகர் நவாசுத்தீன் சித்திக் இணைகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

 

நடிகை சிம்ரன் முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கிறார். தனது தனித்தன்மை நடிப்பால் பாலிவுட்டில் பல விருதுகளை பெற்றுள்ள முன்னணி நடிகர் நவாசுத்தீன் சித்திக் முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News