சமந்தா பெயர் மாற்றம்!! என்னவா இருக்கும்?

Updated: Oct 12, 2017, 11:39 AM IST
சமந்தா பெயர் மாற்றம்!! என்னவா இருக்கும்?

பிரபல தெலுங்கு நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் ‘ஏம் மாய சேஸாவே’ படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்தனர். அப்போதிலிருந்தே இருவரும் காதலிக்க தொடங்கினர். 

இதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களது இந்து முறை மற்றும் கிறிஸ்தவ முறை திருமணம் கடந்த 6 மற்றும் 7 அன்று நடைபெற்றது.

இந்நிலையில் தனது பெயரை சமந்தா ருத் பிரபு என்ற பெயரை அவர் தற்போது சமந்தா அக்னிநேனி என்று மாற்றிவிட்டார்.

இந்த தகவலை அவர் டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.