கேன்ஸ் பட விழாவில் ‘சங்கமித்ரா’ பர்ஸ்ட் லுக் வெளியீடு!!

Updated: May 19, 2017, 01:20 PM IST
கேன்ஸ் பட விழாவில் ‘சங்கமித்ரா’ பர்ஸ்ட் லுக் வெளியீடு!!
Pic Courtesy : @ThenandalFilms

கேன்ஸ் பட விழாவில் ‘சங்கமித்ரா’ பர்ஸ்ட் லுக் அதிகாரபூர்வமாக வெளியிட்டப்பட்டது.

வரலாற்று கதையை அடிப்படையாக கொண்டு சுந்தர்.சி இயக்கும் படம் தான் ‘சங்கமித்ரா’. இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. 

பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில், ‘சங்கமித்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை இணையத்தில் வெளியிட்டப்பட்டது. தற்போது இவ்விரண்டு போஸ்டர்களுக்குமே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஆகியோர் நடிக்கின்றனர். இசை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அமைக்கிறார்.

 

 

எட்டாம் நூற்றாண்டில் வாழ்கிற பேரழகியான இளவரசி ‘சங்கமித்ரா’, மற்ற அரசர்களிடம் இருந்து தன்னையும், தன் ராஜ்ஜியத்தையும் காப்பாற்றிக் கொள்ளப் போராடுவதுதான் கதையாம். இதில் சங்கமித்ராவாக ஸ்ருதி நடிக்கிறார். ‘சங்கமித்ரா’ படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.