விவேகம்: இணையத்தை கலக்கும் "சர்வைவா"

Updated: Aug 12, 2017, 02:20 PM IST
விவேகம்: இணையத்தை கலக்கும் "சர்வைவா"
Pic Courtesy: Youtube

'விவேகம்' படத்தின்  'சர்வைவா’ பாடல் யூ டுயுபில் 1 கோடி பார்வையாளர்களை கடந்து சக்கைப்போடு போட்டு வருகிறது.

இயக்குனர் சிவா-அஜித் காம்போவில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் விவேகம். அனிருத் இசையமைக்கிறார். விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகி இருந்தன. அதேபோல், இப்படத்தின் மூன்று பாடல்கள்(சர்வைவா, தலைவிடுதலை, காதலடா) வெளியாகி செம ஹிட் ஆனது.

இந்நிலையில் தற்போது படத்தின் 'சர்வைவா’ பாடல் இணையத்தில் 1 கோடி பார்வையாளர்களை கடந்து சக்கைப்போடு போட்டு வருகிறது.

வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.