பர்த்டே ட்ரீட்- சிவகார்த்திகேயனின் படம் பெயர் வெளியீடு

Updated: Feb 17, 2017, 03:14 PM IST
பர்த்டே ட்ரீட்- சிவகார்த்திகேயனின் படம் பெயர் வெளியீடு
Pic courtsey: @jayam_mohanraja

மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் 11-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன இன்று அறிவிக்கப்பட்டது. 

1984-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் தலைப்பை தான் சிவகார்த்திகேயனின் 11-வது படத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்து உள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைகிறார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று, படத்தின் பெயரை அறிவித்துள்ளனர். ‘வேலைக்காரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.