இன்று முதல் திரையரங்குகளில் சுந்தர்.சி-யின் ‘கலகலப்பு 2’படம்!

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கலகலப்பு 2’ " திரைப்படம் இன்று முதல் திரைக்கு வந்தது. 

Updated: Feb 9, 2018, 11:16 AM IST
இன்று முதல் திரையரங்குகளில் சுந்தர்.சி-யின் ‘கலகலப்பு 2’படம்!

அரண்மனை 2’ படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கலகலப்பு 2’. 2012-ம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு’ முதல் பாகத்தில் விமல், மிர்ச்சி சிவா, ஓவியா, அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் ஹிட்டாது.

தற்போது இதன் இரண்டாம் பாகம் ‘கலகலப்பு 2’-வில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் திரசா நடித்துள்ளனர். முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவாவும் இப்படத்தில் நடித்துள்ளாராம். மேலும், வையாபுரி, சதீஷ், மனோபாலா, ரோபோ ஷங்கர், சந்தான பாரதி என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

ஆவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் நடிகை குஷ்பூ தயாரித்துள்ள இதற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார், UK.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீஸர், 2 மேக்கிங் வீடியோ மற்றும் ‘ஒரு குச்சி ஒரு குல்ஃபி - காரைக்குடி இளவரசி - தாறுமாறு’ ஆகிய 3 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த சென்சார் குழுவினரும் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. 

தற்போது, இப்படத்தின் இன்னொரு பாடலான புடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கலகலப்பு 2’ " திரைப்படம் இன்று முதல் திரைக்கு வந்ததுள்ளது.