கமல்ஹாசன் சகோதரர் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் இரங்கல்

Last Updated: Monday, March 20, 2017 - 10:48
கமல்ஹாசன் சகோதரர் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் இரங்கல்
Zee Media Bureau

கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசனின் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

லண்டனில் கமல்ஹாசனின் சகோதரரான சந்திரஹாசன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த திரைப் பிரபலங்கள்,அரசியல் பிரமுகர்கள் அவருடைய மறைவுக்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சந்திரஹாசனின் மறைவுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அதில் கூறியதாவது:- 

“என்னுடைய நண்பர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசனின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.” என தனது டிவிட்டர் பதிவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

 

 

comments powered by Disqus