“அறம்” படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்..!!

லேடி சூப்பர் ஸ்டார் நடித்த அறம் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார். 

Updated: Nov 14, 2017, 03:02 PM IST
“அறம்” படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்..!!
Zee News Tamil

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் 'அறம்'. 

இந்த படத்தை பற்று அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் வந்து கொண்டே இருக்கின்றது. விமர்சன ரீதியாகவும் இந்த படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. சமூக வலைதளங்களில் இந்த படத்தை பாராட்டி வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், அறம் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். ரஜினியின் பாராட்டு பெரும் ஊக்கத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.