'சோலோ' படத்தின் டீசர் வெளியீடு!

Updated: Aug 12, 2017, 06:35 PM IST
'சோலோ' படத்தின் டீசர் வெளியீடு!
Pic Courtesy: Youtube

துல்கர் சல்மான் மற்றும் நேஹா ஷர்மா நடிப்பில், தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளிவர இருக்கும் திரைப்படம் 'சோலோ'. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டீசர் இன்று வெளியானது.

'சோலோ' ரொமாண்டிக் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. இப்படத்தினை பிஜாய் நம்பியார் இயக்குகிறார். கோவிந்த் மேனன் இசையமைகின்றார். துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகின்றார். தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் ஒரே நேரத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. ஏற்கெனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.