"கரு" திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வந்துவிட்டது!!

கரு திரைப்படம் வெளிவரும் தேதி வந்துவிட்டது.

Last Updated : Dec 17, 2017, 11:37 AM IST
"கரு" திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வந்துவிட்டது!! title=

ஏ.எல்.விஜய் இயக்கி சமீபத்தில் வெளியான படம் ‘வனமகன்’. இதனைத் தொடர்ந்து ‘கரு’ என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார். 

ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இந்த படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நாக செளரியா, ஆர்.ஜே.பாலாஜி, சந்தான பாரதி, ரேகா, நிழல்கள் ரவி, ஸ்டண்ட் சில்வா என பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்து வருகிறார். நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து, இந்தத் திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ‘கரு’படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ரை பிரபு தேவா வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News