த்ரிஷா நடிக்கும் மோகினி படத்தின் இசை குவிக்கும் பாராட்டு!!

த்ரிஷா நடிப்பில் வெளியாகும் "மோகினி" திரைப்படத்தின் இசை இன்று  வெளியிடப்பட்டது.

Updated: Jan 12, 2018, 06:25 PM IST
த்ரிஷா நடிக்கும் மோகினி படத்தின் இசை குவிக்கும் பாராட்டு!!
Pic Courtesy : Twitter

"மோகினி" - த்ரிஷா மற்றும் ஜாக்னி பக்னானி நடிப்பில் உறுவாகிவரும் த்ரில்லர் திரைப்படம். ரமணா மாதேஷ் இப்படத்தினை இயக்குகிறார். லண்டனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றது.

பூர்னிமா பாக்கியராஜ், சுரேஷ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். ப்ரின்ஸ் பிட்சர்ஸ் எஸ்.லக்ட்சுமன குமார் இப்படத்தினை தயாரிக்கின்றார். விவேக் மெர்வின் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். விரைவில் வெளிவரவிருக்கும் இந்த த்ரில்லர் திரைப்படம் திரிஷா-வுக்கு நல்ல பெயர் வாங்கி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது "மோகினி" திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்ப்பு பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இசை இன்று  வெளியிடப்பட்டது.