கிடைத்தது தானா சேர்ந்த கூட்டத்திற்கு யு/ஏ சான்றிதழ்!!

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

Updated: Jan 2, 2018, 05:01 PM IST
கிடைத்தது தானா சேர்ந்த கூட்டத்திற்கு யு/ஏ சான்றிதழ்!!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாரான திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றளித்துள்ளதாக அதிகாரப்பூவமாக செய்தி வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சூர்யா உடன் நடிக்க வேண்டும் என்ற இவரது சிறிய வயது சபதம் நிறைவேறியுள்ளதாக சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தப் படம் தமிழர் திருநாளான பொங்கல் அன்று திரைக்கு வருகிறது. இந்தச் செய்தி வெளியானது முதல் ட்விட்டரில் தானா சேர்ந்த கூட்டம் சென்னை ட்ரெண்ட்டில் இடம்பிடித்துள்ளது.