விஜய்யின் 'லியோ' படத்தில் இணையப்போகும் சூப்பர் ஸ்டார்?

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான ராம் சரண், 'லியோ' படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடிக்கப்போவதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Feb 13, 2023, 09:56 AM IST
  • 'லியோ' படத்தில் ராம் சரண் கேமியோ தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
  • 'லியோ' படத்தின் சண்டை காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டு வருகிறது.
  • பாலிவுட்டில் பிரபல நடிகரான சஞ்சய் தத் 'லியோ' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விஜய்யின் 'லியோ' படத்தில் இணையப்போகும் சூப்பர் ஸ்டார்?  title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.  'லியோ' படத்தின் பணிகள் ஆரம்பமாவதற்கு முன்னரிலிருந்தே ரசிகர்கள் படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.  காஷ்மீரில் நிலவி வரும் கடும் குளிரில் படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர், இங்கு படத்தின் அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது.  படப்பிடிப்பு தளத்திலிருந்து சில பிடிஎஸ் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.  ஏற்கனவே படத்தில் நடிக்கப்போகும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதன்படி படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி, மேத்யூ தாமஸ், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர்.  ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த படம் பெரியளவில் நட்சத்திர பட்டாளங்களை கொண்டு உருவாகிறது.

மேலும் படிக்க | ’டாடா’ கவினுக்கு ஹீரோயின் அபர்ணா தாஸின் எமோஷ்னல் கடிதம்..!

தற்போது லியோ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, படத்தில் பெரிய டோலிவுட் பிரபலம் ஒருவர் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே வெளியான ப்ளடி ஸ்வீட் எனும் படத்தின் ப்ரோமோ ரசிகர்களிடம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த ப்ரோமோ வீடியோவில் காஷ்மீரில் உள்ள பாலம் ஒன்றில் வரிசையாக விலையுயர்ந்த கார்கள் அணிவகுத்து சென்ற காட்சி இடம்பெற்றிருந்தது.  அதில் ஒரு கார் தெலுங்கானா மாகாணத்தின் பதிவெண்ணை கொண்டிருந்தது, எனவே தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான ராம் சரண், 'லியோ' படத்தில் தளபதி விஜய்யுடன் நடிப்பார் என்று சில யூகங்கள் எழுந்திருக்கிறது.  முன்னர் நடைபெற்ற 'விக்ரம்' பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எதிர்காலத்தில் ராம் சரணுடன் இணைந்து தமிழ்/தெலுங்கு படங்களில் பணிபுரிய இருப்பதாக கூறியதால், லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் ராம் சரண் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'லியோ படத்தில்' ராம் சரண் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  லியோ படத்தில் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் நடிக்கின்றனர் என்று முன்பே கூறப்பட்டது.  பாலிவுட்டில் இருந்து சஞ்சய் தத் நடிக்கிறார், அதனை தொடர்ந்து பிருத்விராஜ் சுகுமாரன், ரக்ஷித் ஷெட்டி, நிவின் பாலி மற்றும் சில பிரபலங்களை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

மேலும் படிக்க | தங்கத்தில் மின்னும் கைராவின் அத்வானியின் தாலி... எத்தனை கோடி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News