ஒரு நல்ல நாள் பார்த்து செல்றேன் - விஜய்சேதுபதியின் வித்தியாசமான தோற்றம்

Last Updated: Thursday, October 12, 2017 - 15:50
ஒரு நல்ல நாள் பார்த்து செல்றேன் - விஜய்சேதுபதியின் வித்தியாசமான தோற்றம்
Pic Courtesy : Twitter

தனது இயல்பான நடிப்பால் அனைவரயும் கவர்ந்தவர் விஜய் சேதுபதி. இவரை மக்கள் செல்வன் என்று பாசத்துடன் அனைவரும் அழைத்து வருகின்றனர். அதேபோல தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் ஒரே நேரத்தில் மிக அதிகளவில் படம் நடித்து வரும் ஒரே நாயகன் விஜய்சேதுபதி மட்டுமே.

அந்த வகையில் ஆறுமுக குமார் இயக்கத்தில் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தின் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். அவரின் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன.