விஜய் வசந்த்தின் அடுத்தப் படம் மை டியர் லீசா!

Last Updated: Thursday, October 12, 2017 - 18:51
விஜய் வசந்த்தின் அடுத்தப் படம் மை டியர் லீசா!

நடிகர் விஜய் வசந்த்தின் அடுத்தப் படம் மை டியர் லீசா என்று தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே நிழல்கள் ரவி நடிப்பில் 1987ம் ஆண்டு வெளியான படம் மை டியர் லிசா. இப்படம் வெளியாகி 30 வருடங்கள் ஆகியும், இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இடம்பெற்றவை.

மை டியர் லீசா என்ற பெயரிலே நடிகர் விஜய் வசந்த் நடிக்க உள்ளார். இதில் விஜய் வசந்த்க்கு ஜோடியாக சாந்தினி மற்றும் 
ஆடுகளம் நரேன், சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

இசை டி.எம் .உதயகுமார், ஒளிப்பதிவு ஜெய்சுரேஷ், இப்படத்தை ரமேஷ் ரெட்டி தயாரிக்க உள்ளார்.

 

;