விஜய் சேதுபதி - திரிஷா 96 படம் பூஜையுடன் துவங்கியது!

Last Updated : Jun 12, 2017, 04:48 PM IST
விஜய் சேதுபதி - திரிஷா 96 படம் பூஜையுடன் துவங்கியது! title=

விஜய் சேதுபதி - திரிஷோ முதல் முறையாக இணைந்துள்ள ‘96’ படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது.

மெட்ராஸ் என்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபல், தயாரிக்கும் இப்படத்தின் மூலம் பிரபல ஒளிப்பதிவாளர் சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகிறார். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கோவிந்த் மேனன் இசையமைக்க கோவிந்தராஜ் எடிட்டிங் செய்கிறார்.

இப்படத்தின் துவக்க விழாவில் விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டதோடு, இயக்குநர்கள் லஷ்மன், பாலாஜி தரணிதரன், தியாகராஜா குமாரராஜா, இசையமைப்பாளர் பைசல், ஒளிப்பதிவாளர் சுகுமார் ஆகியோரும் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Trending News