Video: இணையத்தை கலக்கும் சாமி-2 மிரட்டலான மோஷன் போஸ்டர்!

சாமி-2 திரைப்படத்தின் இரண்டாவது மோஷன் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Updated: May 17, 2018, 07:07 PM IST
Video: இணையத்தை கலக்கும் சாமி-2 மிரட்டலான மோஷன் போஸ்டர்!
Screengrab (YouTube)

சாமி-2 திரைப்படத்தின் இரண்டாவது மோஷன் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம், த்ரிஷா நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் "சாமி". இப்படத்தின் இரண்டாம் பாகமான "சாமி ஸ்கொயர்" தற்போது தயாராகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில், பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுடன் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

காரைக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. படத்தின் படபிடிப்பு வேலைகள் 80% முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது மோஷன் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close