விக்ரம் வேதா- 20 வினாடி வீடியோ காட்சி!!

Updated: Jul 17, 2017, 03:57 PM IST
விக்ரம் வேதா- 20 வினாடி வீடியோ காட்சி!!

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் 'விக்ரம் வேதா' படத்தின் 20 வினாடி வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

ஓரம்போ, வா’ படங்களுக்கு பிறகு இயக்குனர் புஷ்கர் – காயத்ரி இணைந்து இயக்கியுள்ள படம் ‘விக்ரம் வேதா’. 

சாம்.சி.எஸ். இசையமைத்துள்ள இதற்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘Y NOT ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். 

இந்த படத்தில் மாதவன் விஜய் சேதுபதி, ஸ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி நடித்து உள்ளனர். 21-ம் தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் கதாபாத்திரத்தின் அறிமுகம் குறித்த 20 வினாடி வீடியோ வெளியாகியுள்ளது.