ஊழலுக்கு எதிராக கமல்ஹாசனின் புதிய அவதாரம்

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தின் ப்ரோஃபைல் படத்த்தில் பாரதியின் உருவம் கொண்ட தனது படத்தை வைத்துள்ளார்.

Last Updated : Nov 22, 2017, 08:30 AM IST
ஊழலுக்கு எதிராக கமல்ஹாசனின் புதிய அவதாரம்  title=

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தின் ப்ரோஃபைல் படத்த்தில் பாரதியின் உருவம் கொண்ட தனது படத்தை வைத்துள்ளார்.

தற்போது இந்த ப்ரோஃபைல் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதேவேளையில், நேற்று அறப்போர் இயக்கத்தின் வீடியோ ஒன்றை ட்வீட் செய்து, தமிழக அரசியல் மற்றும் அதிகாரிகளின் ஊழலை ஆதாரத்தோடு வெளியிட்ட, அறப்போர் இயக்கச் சகோதரர்களுக்கு நன்றியும், வாழ்த்துகளும். என்னைக் கேள்வி கேட்போருக்கு இதுவே போதுமான பதில். இது ஆரம்பம்தானாம். இன்னும் அவர்களிடம் பல ஆதாரங்கள் உள்ளதாம் என கமல் தனது  டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக் கூடாது என கமல்ஹாசன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News