நள்ளிரவு வெளியானது விவேகம் சிங்கிள் ஆடியோ டீசர்!

Last Updated : Jun 15, 2017, 09:51 AM IST
நள்ளிரவு வெளியானது விவேகம் சிங்கிள் ஆடியோ டீசர்! title=

'தல' அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் சிங்கிள் ஆடியோ டீசர் வெளியானது.

அஜித் நடிக்கும் விவேகம் படம் அவருக்கு 57-வது படம் ஆகும். 'சிறுத்தை' சிவா இயக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் கிட்டதட்ட ரூ. 90 கோடி செலவில் தயாரித்துள்ளது. 

விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

இப்படத்தின் இசை உரிமைக்கு கடும் போட்டி நிலவி வந்தது. அஜித்தின் சமீபத்திய படங்கள் பலவற்றின் இசை உரிமையைப் பெற்ற சோனி நிறுவனம் இப்படத்தின் இசை உரிமையையும் வாங்கியுள்ளது. 

அதன்படி விவேகம் படத்தின் சிங்கிள் ஆடியோ டீசர் 15-ம் தேதி 12.01 மணியளவில் வெளியிடப்பட்டது.

Trending News