கொல்கத்தாவில் கமல்ஹாசன் மம்தா பானர்ஜியை சந்தித்தார்

கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள கமல்ஹாசன் இன்று கொல்கத்தா சென்றுள்ளார்.

Updated: Nov 10, 2017, 08:15 PM IST
கொல்கத்தாவில் கமல்ஹாசன் மம்தா பானர்ஜியை சந்தித்தார்
Zee Media

கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள கமல்ஹாசன் இன்று கொல்கத்தா சென்றுள்ளார்.

நான் அரசியலுக்கு வந்துவிட்டேன். கட்சி தொடங்குவதை அமைதியாகத்தான் செய்ய முடியும். கட்சியின் பெயர் விரைவில் அறிவிப்பேன் என கூறியிருந்தார் கமல். மக்கள் தன்னுடன் நேரடியாக தொடர்பு கொள்ள மொபைல் ஆப் ஹேஸ்டேக் வெளியிட்டுள்ளார். இந்த மொபைல் ஆப் அடுத்த வருடம் ஜனவரியில் அறிமுகச் செய்யப்படும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று கொல்கத்தா சென்றுள்ள கமல்ஹாசன், மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க உள்ளார்? என தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கனவே கமல்ஹாசன் கேரள சென்று முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அதன்பிறகு சென்னை வந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நட்கர் கமல்ஹாசனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.