நிர்மலா தேவியின் மவுனத்தை களைத்த சிபிசிஐடி: சிக்கிய 2 பேராசிரியர்கள்!!

பேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன் என நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Last Updated : Apr 21, 2018, 01:07 PM IST
நிர்மலா தேவியின் மவுனத்தை களைத்த சிபிசிஐடி: சிக்கிய 2 பேராசிரியர்கள்!! title=

தவறான செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் தற்போது கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 18-ம் தேதி நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து எஸ்.பி ராஜேஸ்வரி தலைமையிலான சிபிசிஐடி குழு விசாரணை நடத்தி வருகிறது. 

இதனையடுத்து, நேற்று சாத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவியை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்டையில், ஆடியோ விவகாரம் பற்றி நிர்மலாதேவியிடம் சிபிசிஐடி 2 ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. 

பெரும்பாலான கேள்விகளுக்கு நிர்மலா தேவி மவுனத்தையே பதிலாக தந்துள்ளார். மாணவிகளிடம் யாருடைய தூண்டுதலின் பேரில் பேசினீர்கள் என கேட்டபோது, காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் தான் ஆசை வார்த்தை கூறி தன்னை தூண்டியதாக தெரிவித்துள்ளார்.

அவரது வாக்குமூலத்தை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். இதற்கிடையில் சி.பி.சி.ஐ.டி. குழுவினரின் ஒரு தரப்பு, காமராஜர் பல்கலைக்கழகம் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது.

இதை தொடர்ந்து, பதிவாளர் மற்றும் தேர்வாணையர் அலுவலகங்களில் சோதனை நடத்திய அவர்கள், சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி வருகின்றார். 

Trending News