உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு: ஏப். 21-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

நாகர்கோவிலில் சனிக்கிழமை (ஏப்.21) அன்று தனியார் துறை சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 

Updated: Apr 17, 2018, 03:00 PM IST
உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு: ஏப். 21-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

நாகர்கோவிலில் சனிக்கிழமை (ஏப்.21) அன்று தனியார் துறை சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 

இந்த்ச வேலைவாய்ப்பு முகாமில் 8 வகுப்பு முதல் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இதுகுறித்து, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது......!

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில், பிள்ளையார்புரத்தில் உள்ள சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் ஏப். 21-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருக்கிறது.
 
இந்த முகாமில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகின்றனர்.

இந்த்ச வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் N​c‌s.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

மேலும், விவரங்களுக்கு 04652-264191 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close