இந்திய யாத்ரீகர்களை சந்திக்க அனுமதி மறுப்பு: பாக்., மீது இந்தியா கண்டனம்

பாகிஸ்தானில் வழிபாட்டிற்கு சென்ற சீக்கிய யாத்ரீகர்களை சந்திக்க அந்நாட்டிற்கான இந்திய தூதருக்கு அனுமதி மறுக்கப்படடதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.! 

Updated: Apr 15, 2018, 04:06 PM IST
இந்திய யாத்ரீகர்களை சந்திக்க அனுமதி மறுப்பு: பாக்., மீது இந்தியா கண்டனம்
ZeeNews

டெல்லி: பாகிஸ்தானில் வழிபாட்டிற்கு சென்ற சீக்கிய யாத்ரீகர்களை சந்திக்க அந்நாட்டிற்கான இந்திய தூதருக்கு அனுமதி மறுக்கப்படடதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்து வருகிறது.

இதை தொடர்ந்து வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது...! 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஒப்பந்தப்படி, இந்தியாவை சேர்ந்த 1800 சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தானில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் பஞ்சா சாகிப் குருத்வாராவில் தங்கியிருந்தனர். அவர்களை சந்திக்க வருமாறு, அந்நாட்டிற்கான இந்திய தூதருக்கு குருத்வாரா தலைவர் அழைப்பு விடுத்திருந்தார். இதன் அடிப்படையில், தூதர் அங்கு சென்று யாத்ரீகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க காரில் சென்றுள்ளார். ஆனால், பாதுகாப்பு காரணங்கள் எனக்கூறி, யாத்ரீகர்களை தூதர் சந்திக்க விடாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். 

இதை தொடர்ந்து, ஏப்ரல் 12-ம் தேதி வாகா ரயில் நிலையத்திலும் அவர்களை சந்திக்க இந்திய தூதருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். இது குறித்து பாகிஸ்தானிடம் வெளியுறவு அமைச்சகத்திடம் கண்டனத்தை பதிவு செய்துள்ளோம் என வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close