இனிதே நடைப்பெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழா!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை ஜனாதிபதி கோவிந்த் வழங்கினார்.

Last Updated : Mar 20, 2018, 08:53 PM IST
இனிதே நடைப்பெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழா! title=

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம், குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் ‘பத்ம’ விருதுகளை மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகின்றது. 

அந்த வகையில் இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று இவ்விருதுகள் வழங்கப்பட்டது. 

இந்தப்பட்டியளின்படி இசைஞானி இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது.

இன்று மாலை டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைப்பெற்ற இந்த விருதுகள் வழங்கும் விழாவில். இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை ஜனாதிபதி கோவிந்த் வழங்கினார். அதேவேலையில் ஸட்டல் வீரர் ஸ்ரீகாந்த், டென்னிஸ் வீரர் சோம்நாத் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதினையும் வழக்கினார்.

இவர்களை தொடர்ந்து மற்றவர்கள் விருதுகளை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்!

Trending News