"எரிபொருள் சவால்" கோலியின் சவாலை ஏற்ற மோடிக்கு ராகுல்காந்தி சவால்..

விராத் கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சவால் விடுத்துள்ளார். 

Written by - Shiva Murugesan | Last Updated : May 24, 2018, 03:15 PM IST
"எரிபொருள் சவால்" கோலியின் சவாலை ஏற்ற மோடிக்கு ராகுல்காந்தி சவால்.. title=

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று "நாம் ஃபிட்டாக இருந்தால் இந்தியா ஃபிட்டாக மாறும்" (#HumFitTohIndiaFit) எனக்கூறி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சமூகவலைதள பக்கத்தில் ஷேர் செய்து, கோலி, ரித்திக் ரோஷன் மற்றும் சாய்னா நேவால் ஆகியோருக்கு டேக் செய்து, பிட்னஸ் சாவல் விடுத்தார் ஃ

இந்த சவாலை ஏற்ற இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் தனது மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோருக்கு சவால் விடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கோலியின் சவாலை தான் ஏற்றுக்கொண்டதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார். 

விராத் கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சவால் விடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஃபிட்னெஸ் சேலன்ஜ்" (#FitnessChallenge) பதிலாக "எரிபொருள் சவால்" (#FuelChallenge) என ஹேஸ்டேக் மூலம் சவால் விடுத்துள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:- மோடி அவர்கள் விராத் கோலியின் சவாலை ஏற்றது எனக்கு மகிழ்ச்சி. அதேபோல, என் பக்கத்தில் இருந்தும் ஒரு சவால்.. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும், இல்லையெனில் காங்கிரஸ் நாடு முழுவதும் கிளர்ச்சியை ஏற்படுத்தி, நீங்கள் கட்டாயப் படுத்தப்படுவீர். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்". என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

 

 

Trending News