காய்ச்சல், குளிர் சிகிச்சைக்கு சிறந்த ஐந்து இயற்கை வீட்டு வைத்தியம்!

Jul 6, 2016, 02:13 PM IST
1/6

தற்போது மழைக்காலமாக இருப்பதாலும் மற்றும் திடீரென வெப்பநிலை ஏற்படும். இந்த சீசன் மாற்றங்களால் சுகாதார பிரச்சினைகள் பலருக்கு ஏற்படும்.  இதனால் காய்ச்சல், சளி போற்ற தொற்று நோய் வருவது பொதுவான ஒன்றாகும். பயப்படத்தேவயில்லை இதற்கான சிகிச்சை உங்கள் சமையலறையில் இருக்கின்றன. இயற்கை பொருட்கள் பயன்படுத்தி இந்த காதார பிரச்சினைகளை குறைக்க சில எளிய வீட்டு வைத்தியம் உள்ளன. என்ன என்று பார்போம்!!

2/6

பூண்டு

பூண்டு

 சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய பூண்டை நாம் பயன்படுத்த வேண்டும் அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது. சளி பிடித்திருக்கும் போது, பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம் 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை தேனுடன் சேர்த்து தினமும் இரண்டு முறை உட்கொண்டு வர வேண்டும்.

3/6

இஞ்சி

இஞ்சி

மழைக்காலம் என்றாலே சளி பிரச்னைகள் அதிகமாக இருக்கும். இரண்டு அங்குல நீளம் உள்ள இஞ்சியை தோலை நீக்கி, கழுவி, ஆறிய நீர் விட்டு அரைக்கவும். பட்டு போல் இல்லாமல் மிக்சியில், இரண்டு முன்று சுற்று சுற்றினால் போதும். இதை வடிக்கட்டியதும், இந்த சாற்றில் தேன் கலந்து சாப்பிட வேண்டும். இது உடல் நலனுக்கு நல்லது.

4/6

கறுவா(சினமோமம்)

கறுவா(சினமோமம்)

உலகின் பழமையான மசாலாகளில் ஒன்றாகும். கறுவா பல்வேறு சுகாதார நலன்கள் கொண்ட மிகவும் அதிக எதிர்ப்பு ஆக்சிஜனேற்றி செயல்பாடு உள்ளது. இலவங்கப் பட்டை 100 கிராம், மிளகு, திப்பிலி ஆகியவை தலா 10 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். காலை வெறும் வயிற்றில் இரண்டு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் தலைபாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குணமாகும். 

5/6

துளசி இலைகள்

துளசி இலைகள்

துளசி ஒரு குத்துச்செடி. இதில் வெள்ளை துளசி மற்றும் கருந்துளசி என்ற இரு வகைகள் உண்டு. துளசியில் இருமலை குணப்படுத்தும் யூஜினல் மற்றும் சில வேதி பொருட்கள் உள்ளன. துளசி செடியை நன்கு நறுக்கி சிறிது மிளகுடன் கலந்து கசாயம் போட்டு காலை, இரவு குடித்து வந்தால் குளிர்காய்ச்சல், கோழை, இருமல், தொண்டை வறட்சி நீங்குகிறது. வீட்டில் ஒரு துளசி செடி வளர்த்து தினசரி அதன் இலையை உண்டு வந்தால் சளித்தொல்லையே வராது.

6/6

கொத்தமல்லி விதை

கொத்தமல்லி விதை

கொத்தமல்லி விதை இரண்டையும் தண்ணீர் விட்டு காய்ச்சி அந்த தண்ணீரை லேசான சூட்டில் சாப்பிட்டு வந்தால் வெயில் காலங்களில் ஏற்படும் சளி குறையும். கொத்தமல்லி விதை வைட்டமின்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உதவும் ஊட்டச்சத்துகள் கொண்டிருக்கின்றன.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close