வெள்ளரியின் பயனுள்ள ஆறு வழிகள்!

  • Oct 18, 2016, 15:46 PM IST
1 /8

உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளம் வெள்ளரி. இதை சூப், ஊர்காய், சலாத், சான்ட்விச் போன்றதாக செய்து சாப்பிடலாம். வெள்ளரியை அழகு பராமரிப்புக்காகவும் பயன்படுத்தலாம். வெள்ளரியின் சிறப்புகள் என்னவென்று பாப்போம்!!   

2 /8

வெள்ளரி கண்களுக்கு குளிர்ச்சி தரும். வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி கண்களின் மீது வைத்தால் கண்களுக்கு குளிச்சி தருவதுடன் கருவலையம் நீங்கும்.

3 /8

வெள்ளரிக்காய் சரும கருமையை நீக்க உதவும். அதற்கு வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமை மட்டுமின்றி, கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் நீங்கும்.

4 /8

வெள்ளரியை சூப்பாக செய்து கூட அருந்தலாம். நரிக்கிய வெள்ளரியை தயிருடன் சேர்த்து அதனுடன் உப்பு, மிளகுதூள் இவை அனைதும் நன்றாக மிக்ஸ் செய்து சூப் ஆகா அருந்தலாம். 

5 /8

வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டும். வெள்ளரியை நரிக்கி அதனுடன் மிளகு மற்றும் புதினா சேர்த்து தண்ணீ சேர்த்து மிக்சியில் அடித்து குடிக்கலாம்.

6 /8

வெள்ளரியை ஊறுகாயாக செய்து கூட சாப்பிடலாம். வெள்ளரிகாயை கழுவி சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டிக் கொண்டு அதன்மேல் உப்பை தூவி முப்பது நிமிடம் ஊற வைத்து அதற்குபிறகு சோயா சாஸ், வினிகர், சர்க்கரை இவைகளை ஒன்றாக கலந்து அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் ஊற வைத்த பின் எடுத்து உபயோகிக்கலாம்.

7 /8

வெள்ளரியை தயிருடன் சேர்த்து சாபிட்டால் சால்சா டிப் சுவையாக இருக்கும். இதனுடன் தக்காளி, தனியான்கள் மற்றும் மிளகு தூள் சேருது சாபிட்டால் சால்சா டிப் இன்னும் சுவையாக இருக்கும்.

8 /8

வெள்ளரிகள் பெரும்பாலும் ஆங்கிலம் சான்ட்விச் செய்ய பயன்படுகின்றன. இரண்டு பிரெட்களுக்கு நடுவில் நறுக்கிய வெள்ளரி வைத்து அதன்மேல் சிறிது சீஸ் வைத்து சாபிடலாம். By: Irengbam Jenny