எடையை குறைக்கும் ஆரோக்கியமான பானங்கள்!!

  • Oct 13, 2016, 12:36 PM IST
1 /6

இன்றைய சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எடையை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம்.  கொழுப்புகள் குறைக்க இந்த பானங்களை குடித்தால் உடலை ஆரோகியமாக வைத்து கொள்ளலாம். உங்கள் எடை குறைக்க சில ஆரோக்கியமான பானங்களை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

2 /6

வாழைப்பழத்தினை தோல் நீக்கி நறுக்கி அதனுடன் பால், ஐஸ்கியூப் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதை ஒரு டம்ளரில் ஊற்றி தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

3 /6

கிவி, வெள்ளரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி மூன்றையும் துண்டு துண்டாக வெட்டி எடுத்து அதை 5-10 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு சிறிது நேரம் வைத்து குடிதால் உடல் எடை குறையும்.  

4 /6

வெள்ளரி, கொத்தமல்லி மற்றும் சிறிது இஞ்சி சேர்த்து அரைத்து அதனுடன் கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் கலந்து அதனுடன் அரை லெமன் சாற்றை சேர்த்து குடிதால் உடல் எடை குறையும்.

5 /6

அரை டீஸ்பூன் மஞ்சள் தூளுடன் சிறிது டீ இலைகளை சேர்த்து அதனுடன் ஒரு சிட்டிகை இலவங்க ப்பட்டை போட்டு கொதிக்க வைத்தவுடன் அதை வடிகட்டி அதனுடன் அரை லெமன் சாரை சேர்த்து குடித்தால் உடல் எடை குறையும்.

6 /6

இளநீருடன் இரண்டு துண்டு அன்னாசி பழத்தை சேர்த்து அதனுடன் அரைத்த புதினா இலைகள் சேர்த்து குடிதால் உடல் எடை குறையும்.   - இரேங்க்பம் ஜென்னி