சிறுநீர் பாதை தொற்று நோய்(யூரினரி டிராக்ட் இன்பெக்க்ஷன்) அறிகுறிகள்: வீட்டு வைத்தியம்

Sep 15, 2016, 06:52 PM IST
1/6

சிறுநீர்ப்பாதை தொற்று யூரினரி டிராக்ட் இன்பெக்க்ஷன்(யூடிஇ) என்பதாகும்சிறுநீரகம், யூரேட்டர், சிறுநீர்பை,சிறுநீர்குழாய் போன்றவற்றில் ஏற்படும் கிருமி தொற்றுகளை சிறுநீர்ப்பாதை நோய் என்கிறோம். 50 சதவீத பெண்கள் இந்நோயினால் பாதிப்படைகின்றனர். குறிப்பாக 20 முதல் 30 சதவீத பெண்களுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்படுகிறது. ஆண்களுக்கு மிக அரிதாக காணப்படு கிறது. காரணம் ஆண்கள் மற்றும் பெண் உறுப்புகளின் மாற்றமே. பெண்களுக்கு ஆசன வாய்க்கும், யூரித்திராவிற்கும் இடைவெளி குறைவு. எனவே பெண்களை நோய் பலவிதத்தில் பாதிக்கிறது. கருவுற்ற காலத்தில் இந்நோய் பாதிப்பு தொற்றினால் சிறுநீரக பாதிப்புகூட ஏற்படும். அவற்றை போக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள் பார்க்கலாம்..

குருதிநெல்லி பழச்சாறு
2/6

குருதிநெல்லி பழச்சாறு:- குருதிநெல்லி பழச்சாறு சிறுநீரகங்கள், நீர்ப்பை, மற்றும் சிறுநீர் பாதைக்கு உகந்தது எனவே படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்னைக்கும் உகந்தது. படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு குருதிநெல்லி பழச்சாற்றை குடிக்க கொடுங்கள். இது படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த அடிப்படையான, வெற்றிகரமான மருந்தாகும்

அவுரிநெல்லிகள்
3/6

அவுரிநெல்லிகள்:- இது சுவையாகவும், பயனுள்ளதாக இருக்கும். மிதவெப்ப மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண கொண்டு நாடுகளில் பொதுவாக காணப்படும். அவுரிநெல்லி பழச்சாறுடன் பசலைக்கீரை சாறு, குருதிநெல்லி பழச்சாறு கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல் போன்ற சிறுநீர் பிரச்சனைகள் குறையும். மேலும் சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர் நோய் தொற்று கிருமிகள் குறையும்.

நெல்லிக்காய் ( அம்லா )
4/6

நெல்லிக்காய் ( அம்லா ) நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம்.  நெல்லிக்காய் ஜூஸ்கள் பாக்டீரியாவை அழிக்கவல்லது. சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும இருக்கும். ஆகவே நாள் ஒன்ரறுக்கு 2 டம்ளர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகர்
5/6

ஆப்பிள் சைடர் வினிகர்:- சிறுநீரகத் தொற்று என்பது ஒரு வகையான சிறுநீரக பாதை தொற்றுகளாகும்.  ஏனெனில் பாக்டீரியாக்கள் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் வடிகுழாய் மட்டுமின்றி சிறுநீர்ப்பையையும் தாக்கும். 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன், 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆண்டி பாக்டீரியல் தன்மையினால். சிறுநீரகப் பாதை தொற்றின் வேகத்தை தடுக்கலாம்.

எலுமிச்சை சாறு
6/6

எலுமிச்சை சாறு:- ஒரு புதிய தினத்தை ஒரு டம்ளார் வெந்நீருடன் சிறிது அளவு எலுமிச்சை சாறு சேர்த்து பருகுவதுடன் தொடங்குங்கள். எலுமிச்சை சாற்றில், இரத்தம் மற்றும் சிறுநீர் பாதையின் கார அளவை மாற்றக்கூடிய தன்மை உள்ளது. அதன் காரணமாக பாக்டீரியா பரவல் கட்டுப்படுகின்றது. சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகு வேண்டும்.