5 மில்லியன் வியூஸ் பெற்றது “டிக் டிக் டிக்” படத்தின் டிரைலர்!!

ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் "டிக் டிக் டிக்" படத்தின் டிரைலருக்கு 5 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.  

Updated: Jan 10, 2018, 02:05 PM IST
5 மில்லியன் வியூஸ் பெற்றது “டிக் டிக் டிக்” படத்தின் டிரைலர்!!
Pic Courtesy : Twitter

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் "டிக் டிக் டிக்". இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி இருக்கும், இப்படம் வரும் ஜனவரி 26-ம் தேதி (குடியரசு தினம்) முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் ஜெயம் ரவி மகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜபக் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார். மேலும் இப்படம் இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டீஸர் டிரைலர் மற்றும் பாடல் வரிகள் வெளியாகி ரசிகர்களிடையே நல்லவரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ''டிரைலரை'' 5 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close