Amazon வலைதளம் தற்போது Hindi மொழியிலும் பயன்படுத்தலாம்!

பிரபல ஆன்லைன் விற்பனை தளமான Amazon தனது வலைதளத்தின் இந்தி பதிப்பினை பயன்பாட்டிற்கு வெளியிட்டுள்ளது!

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Sep 4, 2018, 05:41 PM IST
Amazon வலைதளம் தற்போது Hindi மொழியிலும் பயன்படுத்தலாம்!

பிரபல ஆன்லைன் விற்பனை தளமான Amazon தனது வலைதளத்தின் இந்தி பதிப்பினை பயன்பாட்டிற்கு வெளியிட்டுள்ளது!

பண்டிகை கால விற்பனைகள் எல்லாம் தற்போது மொபைல் பக்கங்கிலேயே முடிந்துவிடும் நிலையில், பிரபல ஆன்லைன் விற்பனை தளமான Amazon  நிறுவனம் இந்தியாவில் மேலும் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை பொறவேண்டும் என்ற நோக்கத்தில் தனது வலைதளத்தின் இந்தி பதிப்பினை பயன்பாட்டிற்கு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து Amazon நிறுவனத்தின் மேலாண்மை பிரிவு துணைத் தலைவர் மனிஷ் திவாரி அவர்கள் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த அம்சத்தின் மூலம் வாடிக்கையாளர்கள், Amazon-ல் விற்பனையாகும் பொருட்களை பற்றி இனி இந்தி மொழியில் படித்து அறிந்துக்கொள்ள முடியும். மேலும் இதன் மூலம் அமேசான் பக்கத்தில் இணைவோறின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போத தீபாவலி, கிருஷ்துமஸ் போன்ற பண்டிகைகள் வரவிருக்கும் பட்சத்தில் இந்த நடவடிக்கையானது கிட்டத்தட்ட 100 மில்லியன் வாடிக்கையாளர்களை Amazon தளத்திற்கு கொண்டுவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது Amazon தளத்தின் இந்தி பதிப்பு மொபைல் செயலிகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் கணினி பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close