வைரலாகி வரும் ப்ரியா பிரகாஷ் வாரியர் மீது புகார்!

வைரலாகி வரும் ப்ரியா பிரகாஷ் வாரியர் பாடல் இஸ்லாமியர்களின் மனங்களை புண்படுத்திவிட்டதாக, பிரியா வாரியர் மீது ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Updated: Feb 14, 2018, 01:22 PM IST
வைரலாகி வரும் ப்ரியா பிரகாஷ் வாரியர் மீது புகார்!
ZeeNewsTamil

இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக, ஒரே இரவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மலையாள நடிகை பிரியா வாரியர் மீது ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

"ஒரு அடார் லவ்"என்ற படத்தில் இடம்பெற்றுள்ள மாணிக்ய மலராய பூவி என்ற பாடலில், பிரியா வாரியர் புருவத்தை உயர்த்தி, சொல்லும் காதல் காட்சி இணையதளங்களில் வைரலானது. ஒரே இரவில் லட்சக்கணக்கானோர் பார்த்ததன் மூலம், பலரின் மனங்களையும் கொள்ளையடித்தார். இணையதளங்களில் மூன்று நாட்கள் டிரெண்டிங்கில் இருந்து வந்தது.

இந்தக் காட்சியில் சக பள்ளி தோழனான முகமது ரோஷனிடம் புருவத்தை உயர்த்தி பிரியா வாரியர் காதலை வெளிப்படுத்துவார். இந்நிலையில், இந்த பாடல் இஸ்லாமியர்களின் மனங்களை புண்படுத்திவிட்டதாக, பிரியா வாரியர் மீது ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ஹைதராபாத்தை சேர்ந்த மொகமது அப்துல் முக்கித் என்ற இளைஞர் இந்த புகார் மனுவை அளித்துள்ளார். இதனிடையே, இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட காட்சி அல்ல என்று தெரிவித்துள்ள பிரியா வாரியர், அனைவரும் தன்னை பாராட்டியதாகவும், இது இந்த அளவிற்கு வெற்றியடையும் என்று நினைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.