நடிகர் சிம்புவுடம் கைகோர்த்த தனுஷ் பட நடிகை: SeePic

நடிகர் சிம்புவுக்கு ஜோடியான எனை நோக்கி பாயும் தோட்டா நடிகை மேகா ஆகாஷ்.... 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 4, 2018, 06:36 PM IST
நடிகர் சிம்புவுடம் கைகோர்த்த தனுஷ் பட நடிகை: SeePic  title=

நடிகர் சிம்புவுக்கு ஜோடியான எனை நோக்கி பாயும் தோட்டா நடிகை மேகா ஆகாஷ்.... 

இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் மற்றும் சமந்தா இணைந்து நடித்த `அத்திரண்டிகி தாரேதி’ என்ற படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று அதிக வசூலையும் அள்ளியது. அதிக வசூலை பெற்றது மட்டும் இன்றி இப்படம் நான்கு விருதுகளையும் பெற்றது. இப்படத்தை, கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ் தமிழ் ரீமேக் உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

தமிழில் இந்த படம் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாக்கி வருகிறது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க மேகா ஆகாஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. இப்படத்தில் மகத், கேத்ரின் தெரேசா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் தீபாவளிக்கு வெளியிடுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் படத்தின் நாயகி மேகா ஆகாஷ் சிம்புவுடன் பைக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் லைட் கேமரா, ஆக்‌ஷன் என்றும் ட்வீட் செய்துள்ளார். எனவே இந்த புகைப்படம் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தெளிவாக தெரிகிறது. முன்னதாக நடிகர் தனுஷுடன் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து முடித்துள்ள இவர் ரஜினிகாந்தின் பேட்ட படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது...!

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Lights , camera ... action #strsundarcwithlyca

A post shared by Megha Akash (@meghaakash) on

 

Trending News