ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி-யின் KiKi Challenge Video!

சமீப காலமாக இணையத்தில் வைரலாகி வரும் KiKi Challenge-னை ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி ஏற்று கவர்சிகரமான வீடியோவினை வெளியிட்டுள்ளார்!

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Aug 10, 2018, 05:47 PM IST
ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி-யின் KiKi Challenge Video!

சமீப காலமாக இணையத்தில் வைரலாகி வரும் KiKi Challenge-னை ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி ஏற்று கவர்சிகரமான வீடியோவினை வெளியிட்டுள்ளார்!

பிரபல பாப் பாடகர் டார்க்கியின் 'In my feelings' என்னும் பாடல் தொடர்பான சவால்கள் இணைய பிரியர்களை தற்போது சுண்டி இழுத்துள்ளது. பாப் பாடகர் டார்க்கியின் Scorpion என்னும் இசை ஆல்பம் கடந்த மாதம் வெளியானது. இந்த இசை கோப்பில் இடம்பெற்றுள்ள 'In my feelings' என்னும் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனை தொடர்ந்து இந்த பாடலுக்கு தொடர்பாகும் வகையில் "Kiki Challenge" அல்லது "In my feelings challenge" என்னும் பெயரில் இணையத்தில் ரசிகர்கள் புது சவால் ஒன்றினை அறிமுகம் செய்தனர். அதாவது... இந்த பாடலினை வாகனத்தில் ஒலிக்க வைத்துவிட்டு வாகனத்தை விட்டு வெளியே வந்து நடனமாடிக்கொண்டு வானத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டும் என்பது தான்.

இந்த சவாலினை பிரபலங்கள் பலரும் முன்னெடுத்து செய்து வரும் நிலையில், இணைய ரசிகர்கள் சிலர் பழைய பாடல்களுக்கு இந்த Kiki பாடலின் ஒலியினை பின்இணைத்து பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தென்னிந்திய திரையுலகில் ஸ்ரீலீக்ஸ் மூலம் பெரும் சர்சையினை ஏற்படுத்தி வரும் தெலுங்கு நடிகளை ஸ்ரீரெட்டி இந்த KiKi Challenge சவாலினை ஏற்று படுகவர்சியாக நடமாடி இணையத்தில் பகிர்ந்துள்ளார்!

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close