சிலிண்டர் புக்செய்ய இனி Facebook, Twitter போதும் - எப்படி?

வாடிக்கையாளர்கள் தங்கள் சிலிண்டர்களை சமூக ஊடகங்கள் (பேஸ்புக் மற்றும் ட்விட்டர்) மூலம் பதிவு செய்யலாம்.

Updated: Jan 9, 2018, 01:21 PM IST
சிலிண்டர் புக்செய்ய இனி Facebook, Twitter போதும் - எப்படி?

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் தங்கள் சிலிண்டர்களை சமூக ஊடகங்கள் (பேஸ்புக் மற்றும் ட்விட்டர்) மூலம் பதிவு செய்யலாம்.

முன்னதாக, வாடிக்கையாளர்கள் வாயு சிலிண்டர்களை பதிவு செய்ய தொலைபேசி அல்லது செய்தி (SMS) சேவைகளைப் பயன்படுத்தினர்.

ஆனால் தற்போது, பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் திசை நோக்கி இந்தியா தள்ளப்படுவதால், IOC அதன் புதிய டிஜிட்டல் புக்கிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

வர்த்தக நிறுவனங்களில் முதன்முறையாக இந்திய எண்ணெய் நிறுவனமானது, முதன் முறையாக சமூக ஊடக தளங்களில் இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாயு சிலிண்டர்களை எவ்வாறு Facebook மூலம் நிரப்பலாம்!

  • பேஸ்புக் உள்நுழைக
  • ICO-ன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திற்கு (@indianoilcorplimited) செல்க, 
  • அந்த பக்கத்தில் உள்ள Book Now பொத்தானை கிளிக் செய்யவும்

வாயு சிலிண்டர்களை எவ்வாறு Twitter மூலம் நிரப்பலாம்!

  • @indanerefill எனும் கணக்கில் Refill என ட்விட் செய்தால் போதுமானது

 
முதல் முறையாக இந்த வசதியை பயன்படுத்துகையில், தங்களுடைய வாடிக்கையாளர் எண், மற்றும் முழு தகவலை கொடுத்து பதிவு செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது!

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close