Video: 2 வயது குழந்தைக்குள் இவ்வளவு இசை திறமையா?

தந்தைக்கும் மகளுக்குமான பாச பினைப்பினை வார்த்தைகளால் கூறிவிட இயலாது. இதனை மறைமுகமாக கூறும் வகையில் தான் மகள்களின் முதல் காதலன் தந்தை எனவும், மகன்களின் பிடித்தமான சூப்பர் ஹீரோ அப்பா எனவும் கூறுகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 11, 2018, 04:49 PM IST
Video: 2 வயது குழந்தைக்குள் இவ்வளவு இசை திறமையா? title=

தந்தைக்கும் மகளுக்குமான பாச பினைப்பினை வார்த்தைகளால் கூறிவிட இயலாது. இதனை மறைமுகமாக கூறும் வகையில் தான் மகள்களின் முதல் காதலன் தந்தை எனவும், மகன்களின் பிடித்தமான சூப்பர் ஹீரோ அப்பா எனவும் கூறுகின்றனர்.

பெற்றோர் மீதுள்ள பாசத்தால் குழந்தைகள் தங்களது பெற்றோரை பிரதிபளிக்க முயற்சிப்பது உண்ட. அத்தைய முயற்சியின் வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரபல பாப் இசை குழுவான Maroon 5-ன் Girls Like You என்னும் பாடலினை தன் குழந்தையுடன் சேரந்து தந்தை பாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் தந்தை இப்பாடலுக்கு ஏற்றவாரு உதடுகளை அசைக்க, குழந்தையும் அவ்வாரே செய்கிறது. போட்டி போல் நடைப்பெறும் இந்நிகழ்வில் தந்தையை விட குழந்தை சிறப்பாக உதடுகளை அசைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வெகுஜன மக்கள் தற்போதைய காலக்கட்டத்தில் தங்கள் தனி திறமைகளை சமூக ஊடகங்களின் வாயிலாக உலகிற்கு வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த குழந்தையும் தன் தந்தை உதவியோடு இணையத்தில் தனது திறமையினை வெளிக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News