ஆகஸ்ட் 10-ஆம் நாள் வெளியாகிறது கோலமாவு கோகிலா!

நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

Updated: Jul 12, 2018, 07:54 PM IST
ஆகஸ்ட் 10-ஆம் நாள் வெளியாகிறது கோலமாவு கோகிலா!

நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் உறுவாகி வரும் படம் கோலமாவு கோகிலா. இப்படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

முன்னதாக இப்படத்தில் இடம்பெறும் "எதுவரையோ" என்னும் பாடலினை படக்குழுவினர் வெளியிட்டனர். பின்னர் இப்படத்தின் இரண்டவாது பாடலான "கல்யாண வயசு" எனும் பாடலினை கடந்த மே 17-ம் நாள் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த இருப்பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் மூன்றாவது பாடலான "ஒரே ஒரு" எனும் பாடல் கடந்த கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியாகி தற்போது வரை 1,383,496 views பெற்றுள்ளது. 

பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் கடந்த ஜூலை 5-ஆம் நாள் வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close