வைரமுத்து-வை தொடர்ந்து சுசி கணேசன் மீது பாலியல் புகார்!

பிரபல திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பெண் எழுத்தாளர் லீனா மணிமேகலை பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து சுசி கணேசன் தனது முகப்புத்தகத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 16, 2018, 01:00 PM IST
வைரமுத்து-வை தொடர்ந்து சுசி கணேசன் மீது பாலியல் புகார்! title=

பிரபல திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பெண் எழுத்தாளர் லீனா மணிமேகலை பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து சுசி கணேசன் தனது முகப்புத்தகத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாதக "2005-ஆம் ஆண்டு சுசி கணேசனை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிர்காக தான் பேட்டி எடுத்ததாகவும், பேட்டிக்கு பின்னர் தாம் வீட்டிற்கு புறப்பட்டதாகவும், அப்போது காரில் வந்த சுசி கணேசன், வடபழனியில் வீட்டருகே இறக்கி விடுவதாகக் கூறி தம்மை காரில் ஏற்றிக் கொண்டதாகவும், சிறிது நேரம் பேசியபிறகு, திடீரென காரின் கதவுகளை அடைத்து தன்னை பாலியல் பலாத்கார்ம செய்ய முயன்றதாகவும்" லீலா மணிமேகலை தனது புகாரி குறிப்பிட்டு இருந்தார். 

இந்நிலையில் இந்த புகாருக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சுசி கணேசன் அவர்கள் பதிவிட்டுள்ளதாவது...

"லீனா மணிமேகலை- உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. சேற்றில் உருளும் பன்றி , வெள்ளைச் சட்டையோடு சுற்றுபவர்களை பார்த்து எப்படி பொறாமைப்படுமோ அப்படி ஒரு சம்பவத்தை உங்கள் கற்பனைத் திறனோடு ஒரு கதை பண்ணியிருக்கிறீர்கள். 

இந்த உலகம் பொறுக்கிகளுக்கும், போக்கிரிகளுக்கும் உகந்தது என்பதை நீருபித்துவிட்டீர்கள்.... உங்களோடு சகதியில் உருண்டு இருந்தால், ஒருவேளை இந்த பழியிலிருந்து என் பெயர் விடுபட்டிருக்குமோ??? அரை மணிப் பேட்டிக்கு அறிமுகமான முதல் அறிமுகத்திலியே, ஒருவர் தனியாக காரில் ஏறச்சொன்னால் ஏறிக்கொள்ளும்
புதுமைப் பெண்ணான நீங்கள், கத்தியை அந்த அப்பாவி (ஆடம்பரக் கார் வைத்திருந்தவன் எவனோ) நெஞ்சில் சொருகியிருந்தால் நீங்கள் உண்மையானவர். அத்தைனையும் பொய் மூட்டைகள் என்பதை நிருபிக்க ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அவற்றை வெளியிடுவதற்கு முன் - என்னை கொச்சைப் படுத்திய அதே பக்கத்தில் உன் மன்னிப்பை கோருகிறேன். 

இல்லையென்றால் கோர்ட் மூலமாக மான நஷ்ட்ட வழக்கு தொடர்ந்து வருகிற தொகையை, உன்னைப் போன்ற #MeToo -இயக்கத்தை சுய பழிவாங்களுக்கு பயன்படுத்தும் "சமுதாய வைரஸ்களை"-களை களை எடுப்பதற்கு பயன்படுத்துவதைத் தவிற வேறு வழியில்லை.

Social media நண்பர்களுக்கு -தயவு செய்து metoo -இயக்கத்தை திசைதிருப்பும் இதுபோன்ற வக்ர புத்தி கொண்டவர்களை அடையாளம்கண்டு தவிறுங்கள். லீலா மணிமேகலை என்னிடம் கேட்டது இரண்டு உதவிகள்- உதவி இயக்குனர்/பாடல் ஆசிரியர். இரண்டும் என்னால் செய்ய முடியவில்லை. குடும்ப வாழ்க்கையில் தோற்று, கவிஞர் வாழ்க்கையும் கிட்டாத நிலையில், சினிமா உலகம் அறியும் அழுக்குகள் நிறைந்த அவரது சொந்த வாழ்க்கையில் காரித் துப்பமுடியாமல், ஏனோ என்மீது வன்மைத்தை துப்பியிருக்கிறார். கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது. எனது கற்பை சூரையாடியிருக்கிறார். என் குடும்பம், வேதனைபோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட் மூலம் கழுவும் வரை எந்த பக்கமும் சாய்ந்துவிடாமல் காத்திருங்கள்" என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை தொடர்ந்து இன்று லீனா மணிமேகலை தான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தனது விளக்கத்தை அளிக்க காத்திருப்பதாக தெரிவித்து முகப்புத்தக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Trending News