சர்கார்-க்கு போட்டியாக விஸ்வாசம் பாடல் வரிகள் வெளியானது!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் வரிகளை பாடலாசிரியர் அருண் பாரதி வெளியிட்டுள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 25, 2018, 12:27 PM IST
சர்கார்-க்கு போட்டியாக விஸ்வாசம் பாடல் வரிகள் வெளியானது! title=

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் வரிகளை பாடலாசிரியர் அருண் பாரதி வெளியிட்டுள்ளார்!

இயக்குனர் சிவா, நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகி வெளியான வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது இக்கூட்டணி நான்கவாது முறையாக கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். 

இத்திரைப்படத்தினைசத்ய ஜோதி ஃபில்ம்ஸ் தயாரிக்க, அஜித், நயன்தாராவுடன் விவேக், யோகி பாபு, தம்பி ராமைய்யா உள்ளிட்ட பல நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் வெளியான விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் வைரல் ஆனது மேலும் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது, இந்த நிலையில் படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

முன்னதாக இத்திரைப்படத்தின் பர்ஸ்ட லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் சமீபத்தில் இப்படத்தின் படபிடிப்பு காட்சிகள் என சில புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் வரிகளை பாடலாசிரியர் அருண் பாரதி வெளியிட்டுள்ளார். இப்படாலின் வரிகள்....

“எத்தன உயரம் இமயமல – அதில்
இன்னொரு சிகரம் எங்கதல”

இந்தப் பாடல் வரிகளை அஜித் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். நேற்றைய தினம் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்க்கார் திரைப்படத்தின் பாடல் வெளியாகி விஜய் ரசிகர்களை பிஸியாக்கியுள்ள நிலையில் தற்போது அஜித் ரசிகர்களையும் பிஸியாக்கியுள்ளது இப்பாடல் வரிகள்....

Trending News