WATCH: தனது ஒரே வீடியோவில் ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா.....

இணையத்தை கலக்கும் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்-ன் மொக்க ஜோக் வீடியோ! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 18, 2018, 02:21 PM IST
WATCH: தனது ஒரே வீடியோவில் ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா..... title=

இணையத்தை கலக்கும் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்-ன் மொக்க ஜோக் வீடியோ! 

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவான இருட்டு அறையில் முரட்டு குத்து பாத்தில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு, மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இந்த வருடம் நடத்தப்பட்ட தமிழ் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் போட்டியில் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

பிக்பாஸ் வீட்டில் கடி ஜோக்குகளை அள்ளி வீசி வந்த யாஷிகா ஆனந்த் தற்போது தனது சமூகவலைதள பக்கத்தில் மொக்க ஜோக் என்று ஓரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ பதிவில், “என் செல்போன் கீழ போட்டு உடையல ஏன் தெரியுமா? ஏன்னா அது பிளைட் மோட்ல இருந்தது. அதனால கீழ விழாம பறந்துடுச்சு' என ஜோக் கூறியுள்ளார். மேலும், அந்த வீடியோவில் இந்த வீடியோவை உங்களது நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களை கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.   

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

#mokkajokes #joinTheClub Tag your friends and kill them 

A post shared by Y A S H I K A A A N N A N D (@yashikaaannand) on

இதுவரை இந்த பதிவை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ஆனால் இந்த வீடியோவுக்கு அதிகமான நெகட்டிவ் கமெண்ட்கள் வந்துள்ளன. இதைப் பார்த்த நெட்டிசன்கள் 'போதும் யாஷிகா முடியவில்லை’ எனக் கதறியுள்ளனர்.

 

Trending News