என் மனைவியே என் வலிமைக்கு ஆதாரம் - ஷிகர் தவான்!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் தனது பலத்திற்கு காரணம் தன் மனைவி ஆயிஷா முகர்ஜி தான் என புகழாரம் சூட்டியுள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 22, 2018, 02:18 PM IST
என் மனைவியே என் வலிமைக்கு ஆதாரம் - ஷிகர் தவான்! title=

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் தனது பலத்திற்கு காரணம் தன் மனைவி ஆயிஷா முகர்ஜி தான் என புகழாரம் சூட்டியுள்ளார்!

ஆசியாவின் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் செப்டம்பர் 15-ஆம் நாள் துவங்கி செப்டம்பர் 28-ஆம் நாள் வரை நடைபெற்று வருகிறது. 

இத்தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியது. இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் பந்துவீச்சாளர்-களா? இல்லை மட்டையாளர்களா? என கேள்வி எழுப்பினார் விடை காண்பது சற்று கடினம் தான்.... எனினும் இந்த 3 போட்டிகளிலும் நட்சத்திர ஆட்டகாரர் ஷிகர் தவானுக்கு பெரும் பங்கு உண்டு என்பதினை யாராலும் மறுக்க இயலாது.

இந்திய அணியின் சார்பில் தொடக்க வீரராக களமிறங்கும் இவர், நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியும், தேவைப்படும்போது அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தியும் அணியினை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆசிய கோப்பை தொடரில் இதுவரை நடைப்பெற்றுள்ள 3 போட்டியிலும் 127(120), 46(54) மற்றும் 40(47) என சொல்லிக்கொள்ளம் வகையில் ரன்களை குவித்துள்ளார். 

இந்நிலையில் தனது பலத்திற்கு காரணம் தன் மனைவி தான் என தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது....

"என் பக்கதிலே இருக்கும் என் மனைவியால் எனக்கு 100x வலிமை கிடைக்கின்றது. என் ஆதரவு அடையாளம் இவள் தான்" என பதிவிட்டுள்ளார்!

Trending News