பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "பரியேறும் பெருமாள்" First Look!

"பரியேறும் பெருமாள்" திரைப்படத்தின் First Look போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Updated: Feb 13, 2018, 07:56 PM IST
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "பரியேறும் பெருமாள்" First Look!
Pic Courtesy: twitter/@Director_Ram

"பரியேறும் பெருமாள்" திரைப்படத்தின் First Look போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

இயக்குநர் ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள தமிழ் திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. 

இப்படத்தின் FirstLook போஸ்டரினை இன்று இயக்குநர் ராம் வெளியிட்டார். வெளியிட்டு நிகழ்ச்சியில் அவர் தெரிவித்துள்ளதாவது...

"2006-ல் கற்றது தமிழ் திரைப்படத்தின் போது செல்வம் எங்கள் வாழ்க்கையில் வந்து சேர்ந்தான். என் அகம் புறம் என எல்லாம் தெரிந்த என் தோழமை அவன். என் முதல் மகன் அவன். அவனுடய 12 வருட உழைப்பின் பொறுமையின் முதல் விளைச்சல் 'பரியேறும் பெருமாள்'. மாபெரும் சபைகளில் உனக்கு மாலைகள் விழ வேண்டும் செல்வம். விழும்.

திரையுலகம் கண்டிராத மனிதர்களை வெளியே முதன் முதலில் காட்டிய திரைப்படம் அட்டகத்தி. திரை மொழியில் தனக்கென ஒரு விதத்தை உருவாக்கிக் கொண்ட படம். பா.ரஞ்சித்தை அறிமுகப்படத்திய படம். அட்டகத்தியின் வெற்றியே இன்று நீலம் என்ற தயாரிப்பு நிறுவனமாய், சக படைப்பாளியை அங்கீகரிப்பதும் அவர்களுக்கு தன்னுடைய வெற்றியை இடத்தை பங்கு கொடுப்பதும் பண்பட்ட படைப்பாளிகளால் மட்டுமே முடியும். அப்படியாய்ப்பட்ட ஒரு கலைஞன் பா.ரஞ்சித்.

பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனத்தின் முதல் திரைப்படமாக மாரி செல்வராஜ்-ன் பரியேறும் பெருமாள் வெளியாவதற்கு எனது வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்!