பிரதமர் மோடியின் தீபாவளி இவர்களோடு தான், வைரலாகும் Video!

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்து செய்தி கொண்ட வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்!

Updated: Nov 4, 2018, 07:48 PM IST
பிரதமர் மோடியின் தீபாவளி இவர்களோடு தான், வைரலாகும் Video!

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்து செய்தி கொண்ட வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்!

இந்த வீடியோவினை பிரதமர் மோடி அவர்களின் சார்பில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜேபி நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் தீபாவளிப் புத்தாடை, அகல் விளக்கு உள்ளிட்டவை தயாரித்து வழங்குவோரின் மகிழ்ச்சியும், பயன்படுத்துவோரின் மகிழ்ச்சியும் இடம்பெற்றுள்ளது.

பின்னணியில் உழைக்கும் வர்க்கத்தின் மகிழ்ச்சியே தமது மகிழ்ச்சி எனவும், ஒவ்வொருவரும் மற்றவர்களை சார்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இத்துடன் தனது தீபாவளி வாழ்த்துக்களையும் பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.