சன்னி லியோனை பின்னுக்கு தல்லிய ப்ரியா பிரகாஷ் வாரியர்!

ஒரேயொரு வீடியோவில்.... சமூக வலைத்தளவாசிகள் கொண்டாடி தீர்க்கும் அளவிற்கு இணையத்தில் வைரலாக வருகிறார் கேரள நடிகை பிரியா வாரியர்ஸ்..

Updated: Feb 14, 2018, 10:15 AM IST
சன்னி லியோனை பின்னுக்கு தல்லிய ப்ரியா பிரகாஷ் வாரியர்!
ZeeNewsTamil

கேரள பாடல்களுக்கும், பெண்களுக்கும் தமிழ் இளைஞர்கள் இடையே மவுசு எப்போதும் குறைவதில்லை!

சமிபத்தில் "ஜிமிக்கி கம்மல்" உலக அளவில் வைரலாக பரவி அனைவரது கவணத்தையும் ஈர்த்தது. அதனையடுத்து தற்போது திரைக்குவர உள்ள "ஒரு ஆடர் லவ்" எனும் மளையால திரைப்படத்தின், "மணிக்கய மலரே பூவே" பாடலின் வீடியொ கிலிப் ஒன்று தற்பொது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  இப்பாடல் காட்சியில் வரும் ரொமான்டிக் காட்சி தான் தற்போது பலரது வாட்ஸ்அப் ஸ்டேடஸ். 

இந்த வீடியோவிற்கு பின்னர், இக்காட்சியில் நடித்துள்ள ப்ரியா பிரகாஷ் வாரியர்-க்கு ரசிகர் பட்டாளம் குவியத் தொடங்கியுள்ளது!

அதேப்போல் தங்களுக்குப் பிடித்த பிரபலங்கள் இந்த வீடியோவில் இருப்பது போலவும் அவர்கள் சித்தரித்து வருகின்றனர். ஆனால் ப்ரியா பிரகாஷ் வாரியர் தமிழக முன்னணி நடிகர்களை கொண்டு எடிட் செய்த விடியோவை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இப்பாடலுக்கு அப்படத்தில் நடித்துள்ள பிரியா பிரகாஷ் வாரியர், க்யூட்டான ரியாக்ஷனை வெளிப்படுத்தியுள்ளார். இதனைத்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். காரணம் அவரின் கண் அசைவு அப்படி. 

இப்பாடலை, யூடியூப்பில் இந்தப் பாடலை கிட்டத்ததட்ட 45 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ள கமெண்ட்டுகளில் தங்களுக்கு மலையாளம் தெரியாது. இருப்பினும் இந்தப் பெண்ணுக்காகவே பார்க்கிறோம் என கூறியுள்ளனர். 

மேலும், பிரியா வாரியர்ஸை வைத்து எண்ணற்ற மீம்ஸ்களும் பறக்கின்றன. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் இந்தப் பெண்ணை விரும்புவான் என்றும், ச்ச.. என்ன பொண்ணுடா,, என்பது போன்ற ஏகப்பட்ட பதிவுகளும் ட்விட்டரில் பிரியா வாரியர்ஸை புகழ்ந்து பறக்கிறது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close