பஞ்சாப் தமிழ் கவிஞன் ஹர்பன் சிங்கின் தீபாவளி திருநாள் வாழ்த்து!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்!

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Nov 6, 2018, 05:13 PM IST
பஞ்சாப் தமிழ் கவிஞன் ஹர்பன் சிங்கின் தீபாவளி திருநாள் வாழ்த்து!
Pic Courtesy: twitter/@harbhajan_singh

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்!

கடந்த IPL போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் தீபாவளி வாழ்த்து துவங்கி தனது கருத்துக்கள் அனைத்தினையும் தமிழிலேயே பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

சமீப காலமாக ஹர்பஜன் சிங் தமிழ்களுக்கு தெரிவிக்க விரும்பும் கருத்துக்களை தமிழிலேயே தெரிவித்து வருகின்றார். இந்நிலையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்த்தில் பதிவிட்டுள்ளதாவது...

"#தீபாவளி திருநாள் வாழ்த்துகள் தமிழ் உறவுகளே. புத்தாடையுடன் புன்னகையும் இனிப்புடன் மகிழ்ச்சியும் பரிமாறும் முன்னே சரவெடியோடு ஆரம்பமாகும் #தீபஒளி ஆனந்தம். செந்தமிழ் தரணியெங்கும் #விவசாயம் செழிக்கட்டும், சர்க்கரை தமிழோடு இளைய தளபதி #சர்கார் படமும் சேர்ந்தே ஒலிக்கட்டும் #HappyDeepavali" என பதிவிட்டுள்ளார்.