ரசிகர்களிடம் கதறி அழுத சிம்பு: எதற்கு தெரியுமா

நடிகர் சிம்பு, ரசிகர்கள் செய்த செயலை கண்டு பொது மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்நிகழ்வு சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

Updated: Mar 8, 2018, 02:27 PM IST
ரசிகர்களிடம் கதறி அழுத சிம்பு: எதற்கு தெரியுமா

நடிகர் சிம்பு, ரசிகர்கள் செய்த செயலை கண்டு பொது மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்நிகழ்வு சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

ஆசை நாயகன் என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் சிம்புவை பற்றி நல்ல விஷயங்களைச் சொல்பவர்களைத் தாண்டி குறை கூறுபவர்கள் தான் அதிகம்.படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வர மாட்டார், இயக்குனர் சொல்வதைச் செய்ய மாட்டார் என நிறைய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டு வருகிறது.

நடிகர் சிம்பு எப்போதும் தன் மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக கூறிவிடுவார். அதனாலேயே அவர் நிறைய பிரச்சனைகளை சந்தித்தார் என்றே கூறலாம்.

தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என எல்லோரும் ஒன்றாக இணையும் தருணத்தில் நான் அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டுமா வரக்கூடாதா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் சிம்பு தெரிவித்திருந்தார்.

தற்போது அவர், மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்திற்கு சிம்பு படப்பிடிப்பு நேரத்துக்கு முன்பே முழுவதுமாக ரெடியாகி நடிக்கத் தயாராகி விடுகிறாராம். 

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.  இவ்வளவு நாளாக படப்பிடிப்பு 9 மணிக்கு என்றால் மதியத்திற்கு மேல்தான் ஸ்பாட்டுக்கு வருவார் என்று கூறப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் 9 மணி என்றால் அதற்கு முன்பே சென்று மேக்கப் போட்டு தயாராகி விடுகிறாராம் சிம்பு. இதனால் படக்குழுவினரே ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில்,அண்மையில் இவர் பிரபல பாடல் நிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அங்கு அவரை பார்த்த எராளமான ரசிகர்கள் சந்தோஷத்தில் கொண்டாடியுள்ளார். அப்போது அவர், தன்னுடைய ரசிகர்களிடம் ன்னை பற்றி நிறைய பேர் தவறாக கூறியே கேட்டுவிட்டேன். திடீரென்று நீங்கள் நல்லது சொல்லும் போது கேட்பது தாங்க முடியவில்லை என அனைவரின் முன்பும் அழுதிருக்கிறார்.

இந்நிகழ்வு சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close