மகளின் பள்ளியில் தீபாவளி பார்டி கொண்டாடிய சன்னிலியோன்: seepic

மகள் நிஷாவின் பள்ளிக்கு சென்று தீபாவளி கொண்டாடிய சன்னிலியோன்....

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Nov 4, 2018, 03:23 PM IST
மகளின் பள்ளியில் தீபாவளி பார்டி கொண்டாடிய சன்னிலியோன்: seepic
Pic Courtesy : Instagram.

மகள் நிஷாவின் பள்ளிக்கு சென்று தீபாவளி கொண்டாடிய சன்னிலியோன்....

பாலிவுட்டின் "பேபி டால்" என அழைக்கப்படுபவர் சன்னி லியோன். அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறார். 

மேலும் தற்போது சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றினை இணைய தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. இதை தவிர தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் வீரமாதேவி வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த பிஸி செட்யூலுக்கு மத்தியில் சன்னி லியோன் தனது குடும்பத்தாருடன் நேரங்களை செலவிடவும் மறப்பதில்லை. அந்த வகையில் சமீபத்தில் தனது குடும்பத்துடன் மெக்சிக்கோ சென்றுள்ள சன்னி லியோன், தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்டும் வகையில், சன்னி லியோனின் வளர்ப்பு மகளான நிஷாவின் பள்ளிக்கு சென்று தீபாவளி பார்டி கொண்டாடிய புகைப்படத்தை தனது இண்டஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.