அப்பளத்தையடுத்து ஆட்டோமொபைல் ஆயில் விற்கும் பிக் பாஸ் ஜூலி!!

பிக் பாஸ் ஜூலி தற்போது அப்பளத்தையடுத்து ஆட்டோமொபைல் எண்ணெய்யை விற்க துவங்கிவிட்டார். 

Updated: Feb 9, 2018, 01:34 PM IST
அப்பளத்தையடுத்து ஆட்டோமொபைல் ஆயில் விற்கும் பிக் பாஸ் ஜூலி!!
ZeeNewsTamil

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஜூலி அப்பளத்தை அடுத்து தற்போது ஆட்டோமொபைல் ஆயிலுக்கு விளம்பரம் செய்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு ஜூலிக்கு கிடைத்தது. இதையடுத்து, அவர் விமலின் மன்னர் வகையறா படத்தில் மதித்துள்ளார். தற்போது உத்தமி படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அப்பள விளம்பரத்தில் நடித்த ஜூலி அடுத்ததாக டிடிடி நிறுவனத்தின் ஆட்டோமொபைல் ஆயிலுக்கு விளம்பரம் செய்துள்ளார். அந்த ஆயிலை வாங்குமாறு அவர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

அப்பளம், ஆயில், கவுரவத் தோற்றம், ஹீரோயின் என்று ஜூலி அடுத்தடுத்து வளர்ந்து கொண்டிருப்பதாகக் கூறி அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டிடிடி ஆட்டோமொபைல் ஆயிலை வாங்குமாறு கேட்டுக் கொண்ட ஜூலியின் ட்வீட்டை பார்த்து சிலர் கடுப்பாகி சத்தியமாக அந்த ஆயிலை வாங்க மாட்டோம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல் விலை ஏறிப் போயிருக்கும் இந்த நேரத்தில் வந்து ஆயிலை வாங்குமாறு சொல்கிறீர்களே ஜூலி என்று நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.